விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் டெய்லர் பிரிட்ஸ்

நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் பிரிட்ஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோத உள்ளார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சிலியின் அலெஜான்ட்ரோ டேபிலோ உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிட்ஸ் 7-6 (7-3), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சிலியின் அலெஜான்ட்ரோ டேபிலோவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் பிரிட்ஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோத உள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com