பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஆன்ட்ரீவா வெற்றி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்புக்கு முதல்முறையாக தகுதி பெற்ற ஆன்ட்ரீவா தனது பயணத்தை வெற்றியோடு தொடங்கி இருக்கிறார்.

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஆன்ட்ரீவா வெற்றி
Published on: 

இண்டியன்வெல்ஸ்,

உலகின் 'டாப்-8' முன்னணி வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டபிள்யூ.டி. ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகிறார்கள்.

2-வது நாளில் நடந்த ஆட்டம் ஒன்றில் (குரூப் 2) தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அரினா சபலென்கா (பெலாரஸ்), கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். விறுவிறுப்பான ஆட்டத்தில் சபலென்கா 7-6 (7-2), 7-5 என்ற செட் கணக்கில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கினார்.

பெண்கள் டென்னிஸ்

இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 6-4, 6-0 என்ற நேர்செட்டில் முன்னாள் சாம்பியனான எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) பந்தாடி னார். அத்துடன் கடந்த ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் 4-வது சுற்றில் அவரிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டார்.பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்புக்கு முதல்முறையாக தகுதி பெற்ற ஆன்ட்ரீவா தனது பயணத்தை வெற்றியோடு தொடங்கி இருக்கிறார். அடுத்து அவர் சபலென்காவை சந்திக்கிறார்.

இரட்டையர் பிரிவிலும் டாப்-8 ஜோடிகள் மல்லுகட்டுகின்றன. இதில் குரூப்1-ல் கேப்ரில்லா டாப்ரோஸ்கி (கனடா)-லூசா ஸ்டெபானி (பிரேசில்) இணை 6-3, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்)- ஜாங் ஷூவாய் (சீனா) ஜோடியை தோற்கடித்தது.இதே போல் ஹான்யு குவோ (சீனா)- கிறிஸ்டினா மலாடெனோவிக் (பிரான்ஸ்) கூட்டணி சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-1, 12-10 என்ற செட் கணக்கில் சு வெய் ஹிஷ் (சீன தைபே)- ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) இணையை வீழ்த்தியது.

X