பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோகோ காப் வெற்றி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் தொடங்கி யது.

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோகோ காப் வெற்றி
Published on: 

இண்டியன்வெல்ஸ்,

உலகின் 'டாப்-8' முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கி யது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றனர்.

நோஸ்கோவா

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.ஒற்றையர் பிரிவில் தொடக்க லீக் ஆட்டத்தில் (குரூப் 1) விம்பிள்டன் சாம்பியனும், உலக தரவரிசையில் 8-வது இடத் தில் இருப்பவருமான லிண்டா நோஸ்கோவா (செக்குடியரசு), தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள மார்த்தா கோஸ்ட்யுக்கை (உக்ரைன்) எதிர்கொண்டார். நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் நட்சத்திரமுமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) வைரஸ் காய்ச்சல் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக கோஸ்ட்யுக் கால்பதித்தார். 1 மணி 26 நிமிடம் நடந்த ஆட்டத்தில் நோஸ்கோவா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் மார்த்தா கோஸ்ட்யுக்கை தோற்கடித்தார்.

கோகோ காப்

இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், 5-வது இடத்தில் உள்ள சக நாட்டவரான ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். திரில்லிங்கான ஆட்டத்தில் கோகோ காப் 6-4, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தினார்.

X