பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்விடோலினா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

6-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) சந்தித்தார்.
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்விடோலினா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
Published on: 

இண்டியன்வெல்ஸ்,

உலகின் 'டாப்-8' முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப் படி நேற்று அதிகாலை நடந்த குரூப்-2 பிரிவு ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அரினா சப லென்கா (பெலாரஸ்), 6-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) சந்தித்தார்.

ஸ்விடோலினா

எலினா ஸ்விடோலினா 6-3, 3-6. 6-1 என்ற நேர்செட்டில் அரினா சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது வெற்றியை பெற்றார். இதன் மூலம் எலினா ஸ்விடோலினா (2 வெற்றி, ஒரு தோல்வி) தனது பிரிவில் 2-வது இடம் பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அவர் ஏற்கனவே கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து இருந்தார். 2-வது தோல்வியை சந்தித்த முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனையான அரினா சபலென்கா அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து வெளியேறினார். இந்த ஆண்டில் எந்த கிராண்ட்ஸ்லாம் பட் டமும் வெல்லாத சபலென்காவுக்கு டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியும் ஏமாற்றத்தில் முடிந்தது.

முன்னதாக இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 6-2. 6-1 என்ற நேர்செட்டில் வயிற்று பிரச்சினை காரணமாக கடைசி ஆட்டத்தில் இருந்து விலகிய கரோலினா முச்சோவா வுக்கு பதிலாக களம் கண்ட டியானா சினைடெரை (ரஷியா) தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதியில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா)-மிரா ஆன்ட்ரீவா, லிண்டா நோஸ்கோவா (செக்குடியரசு)-எலினா ஸ்விடோலினா மோதுகின்றனர்.

X