உலக ஆண்கள் டென்னிஸ்: அரை இறுதியில் ஜோகோவிச்சை சந்திக்க இருக்கிறார் ஸ்வெரெவ்

போலந்து வீரர் ஹர்காக்சை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்.
உலக ஆண்கள் டென்னிஸ்: அரை இறுதியில் ஜோகோவிச்சை சந்திக்க இருக்கிறார் ஸ்வெரெவ்
Published on

துரின்,

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ள உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.

இதில் கிரீன் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த கிரீஸ் வீரர் சிட்சிபாசுக்கு பதிலாக இடம் பெற்ற இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரியும் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டும் மோதினர். இந்த ஆட்டத்தில் கேமரூன் நோரி 6-1, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டிடம் தோல்வி அடைந்தார்.

மேலும் ரெட் பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-2, 6-4 என்ற நேர் செட்டில் போலந்து வீரர் ஹர்காக்சை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அரை இறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் நம்பர்ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com