உலக டென்னிஸ் தரவரிசை: கிவிடோவா முன்னேற்றம்

உலக டென்னிஸ் தரவரிசையில், கிவிடோவா முன்னேறி உள்ளார்.
உலக டென்னிஸ் தரவரிசை: கிவிடோவா முன்னேற்றம்
Published on

பாரீஸ்,

உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார். செக் குடியரசின் கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப் ஒரு இடம் சறுக்கி 3-வது இடத்தை பெற்றுள்ளார். ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com