உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி; சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி; சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

பாலி,

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நேற்று தொடங்கியது. இதில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார். 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-16 என்ற நேர்செட்டில் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கினார்.

இதனையடுத்து, அவர் அடுத்த லீக் ஆட்டத்தில் யோனி லியை (ஜெர்மனி) எதிர்கொண்டார். இந்த போட்டியில், 21-10, 21-13 என்ற செட் கணக்கில் லியை வீழ்த்தினார். 31 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com