உலக பெண்கள் டென்னிஸ்: முகுருஜா, கோன்டாவெய்ட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது.
உலக பெண்கள் டென்னிஸ்: முகுருஜா, கோன்டாவெய்ட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

குவாடலஜரா,

டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினைச் சேர்ந்த கார்பின் முகுருஜா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் பாலா படோசாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் 1993-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் இறுதி சுற்றுக்குள் நுழைந்த முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

மற்றொரு அரைஇறுதியில் எஸ்தோனியாவைச் சேர்ந்த அனெட் கோன்டாவெய்ட் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கிரீசைச் சேர்ந்த மரியா சக்காரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பெண்கள் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக களம் கண்டுள்ள கோன்டாவெய்ட் தனது முதலாவது முயற்சியிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தி இருக்கிறார். மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் முகுருஜா - கோன்டாவெய்ட் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com