வூஹான் ஓபன் டென்னிஸ் - அலெக்சாண்ட்ராவுக்கு அதிர்ச்சியளித்த சீன வீராங்கனை

அலெக்சாண்ட்ரா ஈலா, வூஹான் ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.
அலெக்சாண்ட்ரா ஈலா
Published on: 

வூஹான்,

சீனாவில் நடைபெற்று வரும் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

முதல் செட்டை வென்ற ஈலா!

முதல் சுற்றுப் போட்டியில் அலெக்சாண்ட்ரா ஈலா, சீன வீராங்கனை ஷி ஹன்னை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஈலா, முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

சீன வீராங்கனை ஆதிக்கம்

முதல் செட்டை இழந்த பின்னர் ஆட்டத்தில் மீண்ட ஷி ஹன், அடுத்த இரு செட்களிலும் அதிரடியாக விளையாடினார். அவர் 6-3, 6-3 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 3 செட்கள் கொண்ட போட்டியில் 4-6, 6-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஷி ஹன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முதல் செட்டை வென்றும் வெற்றியை தக்கவைக்க முடியாத அலெக்சாண்ட்ரா ஈலா, வூஹான் ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com