

மும்பை,
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஆஷ்லின் குருகர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய ஸ்வியாடெக் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.மற்ற போட்டிகளில் மரியா சக்காரி, எலினா ஸ்விடோலினா, போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கா, பிரிட்டனின் சோனே கர்தால் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.