

வூஹான்,
சீனாவில் நடைபெற்று வரும் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஆன் லீயை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஸ்வியாடெக், 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற காலிறுதிப் போட்டிகளில் பிரிட்டனின் சோனே கர்தால், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ, போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கி ஆகியோரும் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இதனால் வூஹான் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.