டென்னிஸ் சாம்பியன்ஷிப் - மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்வரேவ்... அல்காரஸுடன் மோதல்

மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் ஸ்வரேவ் உள்ளார்.
ஸ்வரேவ்
Published on: 

டூரின்,

2026 ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்வரேவ் முன்னேறியுள்ளார்.

இறுதிப்போட்டி

2026 ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவை எதிர்கொண்டார். நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை ஒரு புள்ளியைக்கூட இழக்காமல் 7-0 என ஸ்வரேவ் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் இரு வீரர்களும் கடுமையாக போராடினர். இறுதியில் 6-4 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார். இதன் மூலம் ஸ்வரேவ் இறுதிப்போட்டிக்கு முனேறினார்.

மூன்றாவது பட்டம்

ஏற்கெனவே 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஸ்வரேவ், தற்போது மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளார்.

அல்காரஸுடன் இறுதிப்போட்டி

மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டனை 3-6, 6-3, 7-6 (1) என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வெரேவ் - அல்காரஸ் மோதுகின்றனர். இருவருக்கும் இடையிலான நேரடி மோதலில் அல்காரஸ் 7-6 என முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில், மூன்றாவது முறையாக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று ஸ்வரேவ் சாதனை படைப்பாரா? அல்லது இந்தத் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அல்காரஸ் அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

X