‘விராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட செய்ததில்லை’ - தமிம் இக்பால் சொல்கிறார்

விராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட தான் செய்ததில்லை என்று தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
Published on

புதுடெல்லி,

வங்காளதேச ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் இணைய தள நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், 2-3 வருடங்களுக்கு முன்பு விராட்கோலி உடற்பயிற்சி செய்வதை பார்த்து நான் வெட்கமடைந்தேன். இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஏறக்குறைய எனது வயதையொட்டி இருக்கும் அவர் கடுமையான உடற்பயிற்சிகளை அதிகமாக மேற்கொண்டார். அவர் செய்த பயிற்சியில் பாதியை கூட நான் செய்தது கிடையாது. இந்தியா எங்களது அண்டை நாடு. அவர்கள் என்ன செய்கிறார்களோ, அது வங்காளதேசத்திலும் எதிரொலிக்கும். இந்தியாவில் என்ன நடைபெறுகிறதோ? அதனை தான் நாங்களும் பின்பற்றுவோம். உடல் தகுதி குறித்து இந்தியா எப்பொழுது தனது அணுகுமுறையை மாற்றி கொண்டதோ?, அது வங்காளதேசத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் அணியை பொறுத்தமட்டில் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்பிகுர் ரஹிம் உடல் தகுதியை சிறப்பாக வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com