ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் விலையில்லா சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்

ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி, திரு.வி.க. நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி, பாப்பையநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் விலையில்லா சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி, திரு.வி.க. நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி, பாப்பையநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வத்திராயிருப்பு எஸ்.கொடிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவமாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் முத்துராஜ், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் மீரா தனலட்சுமி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்துமுருகன், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த முருகன், மற்றும் கருமாரி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com