பிளாஸ்டிக் மட்க எத்தனை வருடங்களாகும்..?


பிளாஸ்டிக் மட்க எத்தனை வருடங்களாகும்..?
x

பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணோடு மண்ணாகச் சிதைவடைய 10 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அது உண்மைதான். அதனால்தான் பிளாஸ்டிக்கை முடிந்தவரை மறு உபயோகம் செய்யும்படி விஞ்ஞானிகள் வற்புறுத்துகிறார்கள். வீசியெறியப்படும் பாலிதீன் பைகளை உட்கொண்ட யானைகள் இறந்திருக்கின்றன. திமிங்கலங்கள் செத்து ஒதுங்கியிருக்கின்றன. இச்சம்பவங்கள் மூலமாக பிளாஸ்டிக்கின் தீங்கை உணர முடியும்.

மற்ற பொருட்கள் மிக விரைவாகவே மட்கிவிடும் என்பதிலும் உண்மை இல்லை. ஆம்..! மற்ற பொருட்கள் முழுமையாக மட்க, சில காலம் தேவைப்படும். வாழைப் பழத்தோல்கள் 3-4 வாரங்களிலும், காகிதம் ஒரு மாதத்திலும், கிழிந்த துணிகள் 5 மாதங்களிலும் மட்கும். கம்பளி ஓராண்டை எடுக்கும். மரத்துக்கு 10-15 ஆண்டுகள். தோல் காலணி போன்றவை சிதைய 40-50 ஆண்டுகள் ஆகும். தகர டப்பாக்களுக்கு 50-100 ஆண்டுகள். அலுமினியத்துக்கு 200-500 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், தகரம், அலுமினியத்தை நாம் பிளாஸ்டிக் போல சும்மா தூக்கி எறிவதில்லையே!


Next Story