வியப்பூட்டும் சிற்பம்

இங்கு நீங்கள் காணும் சிற்பம், திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள நின்ற நம்பி பெருமாள் கோவிலில் இருக்கிறது. இந்தத் திருக்கோவில் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
வியப்பூட்டும் சிற்பம்
Published on

ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள், ஆரம்ப கட்டுமான வேலைகள் நடைபெற்ற 10-ம் நூற்றாண்டை குறிப்பிடுகின்றன. என்றாலும் தற்போது இங்குள்ள பெரும்பாலான சிற்பங்கள் 15, 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் உருவானவை.

அதில் ஒன்றுதான், பெண்களின் உருவத்தை வைத்து செதுக்கப்பட்ட இந்த யானை சிற்பம். அசாதாரணமான வேலைப்பாடு கொண்ட இது, 9 பெண்கள் உருவத்தைக் கொண்டு முழுமையான யானை உருவமாக செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு நவநாரி குஞ்சரம் என்று பெயர். 9 பெண் உருவத்தால் உருவான யானையின் மீது ஒருவர் அமர்ந்து வில் போர் புரிவது போல் இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com