தமிழகத்தில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும்-எச்.ராஜா வலியுறுத்தல்

தமிழகத்தில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும் என பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தினார்.
தமிழகத்தில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும்-எச்.ராஜா வலியுறுத்தல்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கணேஷ்பாபு கைது செய்யப்பட்டா. இதனை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் மத மாற்றத்தில் தீய சக்திகள் ஈடுபட்டுள்ளன என்றார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மத மாற்றம் செய்ய 2 பெண்கள் வந்ததற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இதில் நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம். பொய் புகாரில் கணேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்து நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ளனர். எந்த அழுத்தத்தின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த நடவடிக்கை எடுத்தார் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com