

இவர்களைப்போல் மலையாள நடிகரான துல்கர் சல்மானும் (நடிகர் மம்முட்டியின் மகன்) தமிழ் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜெமினிகணேசன் வேடம்.
இதுபோக மேலும் ஒரு புதிய தமிழ் படத்திலும் துல்கர் சல்மான் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. அறிமுக டைரக்டர் கார்த்திக் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.