தமிழ்-தெலுங்கு-இந்தியில் விக்ரம் படம், 3 மொழிகளில் தயாராகிறது

‘டிமாண்டி காலனி,’ ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் தனி முத்திரை பதித்த டைரக்டர் அஜய் ஞானமுத்துவும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள்.
தமிழ்-தெலுங்கு-இந்தியில் விக்ரம் படம், 3 மொழிகளில் தயாராகிறது
Published on

கதாபாத்திரங்களுக்காக உடல் எடையை கூட்டி குறைத்து, நடிப்புக்காக பல தியாகங்கள் செய்பவர், விக்ரம். இவரும், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் தனி முத்திரை பதித்த டைரக்டர் அஜய் ஞானமுத்துவும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. லலித்குமார் தயாரிக்கிறார்.

விக்ரம் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி, மற்றும் சக நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவாகவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் படம் தயாராகிறது. அஜய் ஞானமுத்து டைரக்டு செய்கிறார்.

படப்பிடிப்பு வருகிற ஆகஸ்டு மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் கோடை விடுமுறை விருந்தாக படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம். இந்திய சினிமாவில், மிக முக்கிய படமாக இருக்கும் என்று கூறுகிறார், டைரக்டர் அஜய் ஞானமுத்து.

X

Daily Thanthi
www.dailythanthi.com