வாட்ஸ்அப் பயனர்களுக்கு 4 புதிய சூப்பர் அப்டேட்ஸ்! மெட்டா நிறுவனம் அறிவிப்பு

பயனர்கள் இனி ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு மட்டும் தெரியும் வகையில் 'குரூப் ஸ்டேட்டஸ்' வைத்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு 4 புதிய சூப்பர் அப்டேட்ஸ்! மெட்டா நிறுவனம் அறிவிப்பு
வாட்ஸ்அப்
Published on: 

சென்னை,

பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது வாட்ஸ்அப் குரூப் சாட்களை மேலும் எளிதாக்கும் வகையில் 4 புதிய முக்கிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய அப்டேட்டுகள்

குழுவில் புதிதாக இணையும் உறுப்பினர்கள் உரையாடல்களை எளிதில் புரிந்து கொள்வதற்கும், ஏற்கனவே இருக்கும் பயனர்கள் விட்ட இடத்திலிருந்து உரையாடலை தொடர்வதற்கும் இந்த புதிய அப்டேட்டுகள் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 4 முக்கிய அம்சங்கள் இதோ:-

நிரந்தரமாக மெசேஜ்களை பின் செய்யும் வசதி

முன்பு வாட்ஸ்அப் குழுக்களில் முக்கிய மெசேஜ்களை சில நாட்கள் மட்டுமே 'பின்' செய்து வைக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் மூலம், பயனர்கள் தங்களுக்கு தேவையான முக்கிய மெசேஜ்களை "எப்போதும் இருக்கும் வகையில்" நிரந்தரமாக பின் செய்து வைத்துக் கொள்ள முடியும்.

சாட் ஹிஸ்டரியை பகிரும் புதிய வசதி

குழுவில் புதிதாக இணையும் நபர்களுக்கு சமீபத்திய உரையாடல்களின் வரலாற்றை அனுப்பும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. குழுவின் அட்மின்கள், புதிதாக இணைந்த உறுப்பினரின் பெயரை கிளிக் செய்து சமீபத்திய மெசேஜ்களை எளிதாக பகிரலாம். இந்த மெசேஜ்களும் முழுமையாக எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பானவையாக இருக்கும். முன்பு உறுப்பினர்களைச் சேர்க்கும் போது மட்டுமே வரலாற்றைப் பகிர முடிந்த நிலையில், தற்போது சேர்த்த பிறகும் பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மென்ஷன்களை பில்டர் வசதி

குழு உரையாடல்களில் உங்களை மட்டும் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட மெசேஜ்களை தனியாக பில்டர் செய்து பார்க்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய பில்டரை பயன்படுத்தும்போது, நூற்றுக்கணக்கான மெசேஜ்களுக்கு நடுவே நீங்கள் டேக் செய்யப்பட்ட மெசேஜ்கள் மட்டும் தனியாக தெரியும். இதனால் உங்களைப் பற்றிய உரையாடல்களை நீங்கள் தவறவிட வாய்ப்பிருக்காது.

குரூப் ஸ்டேட்டஸ் வசதி

பயனர்கள் இனி ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு மட்டும் தெரியும் வகையில் 'குரூப் ஸ்டேட்டஸ்' வைத்து கொள்ள முடியும். சாதாரண ஸ்டேட்டஸ் பக்கத்தில் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வது போலவே இதுவும் செயல்படும். இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்திற்கு பிறகு தானாக மறைந்துவிடும். குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் இந்த ஸ்டேட்டஸிற்கு ரியாக்ட் செய்யவும், தங்களின் ஸ்டேட்டஸ்களை அதில் சேர்க்கவும் முடியும்.

வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள இந்த புதிய மாற்றங்கள் குரூப் சாட்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

X