லைக் பட்டனை தொட்டால் வண்ணமயமான வாண வேடிக்கை... வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!

இந்த புதிய அப்டேட், வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்
Published on: 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாட்ஸ் அப் (WhatsApp) செயலியில் புதிய சிறப்பு அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் உள்ள லைக் பட்டனை தொட்டால் வாண வேடிக்கை வெடிப்பது போன்ற அனிமேஷன் தோன்றும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தகவல்களை பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தங்களது அன்றாட நிகழ்வுகளை ஸ்டேட்டஸ் மூலமாகவும் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய வசதிகள் மற்றும் அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பண்டிகை காலங்களில் பயனர்களுக்கு கூடுதல் அனுபவத்தை வழங்கும் வகையில் சிறப்பு அம்சங்களும் அறிமுகம் செய்யப்படுகின்றன.

வண்ணமயமான வாண வேடிக்கை

தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவர் பதிவிட்டுள்ள ஸ்டேட்டஸை பார்க்கும்போது அதில் உள்ள லைக் பட்டனை பயனர்கள் தொட்டால், திரையில் வண்ணமயமான வாண வேடிக்கைகள் வெடிப்பது போன்ற காட்சிகள் தோன்றுகின்றன.

வழக்கமாக ஸ்டேட்டஸ்களுக்கு லைக் கொடுக்கும்போது இதய வடிவிலான குறியீடு மட்டுமே வெளிப்படும். ஆனால், இந்த புதிய வசதியில் லைக் செய்யும்போது தீபாவளி பண்டிகையை நினைவூட்டும் வகையில் வாண வேடிக்கை அனிமேஷன் தோன்றுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை டிஜிட்டல் முறையிலும் உற்சாகமாக கொண்டாடும் வகையில் அமைந்துள்ள இந்த புதிய அப்டேட், வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X