

சமூக வலைதளங்களில் நாம் பயன்படுத்தும் யூஸர் நேம் என்பது காலம் முழுமைக்கும் அது நம்முடைய அடையாளமாகவே மாறி நிற்கும். முதல்முறை யூஸர் நேமை உருவாக்கும்போது நாம் பயன்படுத்திய புனைப் பெயர்கள், எண்கள் போன்றவை கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதன் உண்மையான நோக்கத்தையே மாற்றுவதாக சிலர் நினைக்கக் கூடும். அப்படியான சூழலில் அந்த யூஸர் நேமையே மாற்றினால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கலாம். உங்களின் தொழிலை மாற்றினாலோ அல்லது வேறொரு அடையாளத்தோடு சமூக வலைதளங்களில் களமாடினாலோ நன்றாக இருக்குமே என்றும் நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைப்பவர்களுக்கானது தான் இந்தப் பதிவு.
இன்ஸ்டாகிராமில் யூஸர் நேம் என்பது உங்கள் ஹேண்டிலின் அடையாளமாக இருக்கும். இது உங்கள் புரஃபைலில் வெளியில் தெரியும் பெயரில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதேபோல், இந்த யூஸர் நேம் தான் உங்கள் புரஃபைல் லிங்கின் ஒரு பகுதியாகவும் இருக்கும். அதனாலேயே பெரும்பாலான பயனர்கள், இந்த யூஸர் நேமைத் தேர்வு செய்கையில் அது தனித்துவமாக இருப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுவார்கள். இதில், எழுத்துகள், எண்கள், அடிக்கோடு (Underscore) உள்ளிட்டவைகள் இடம்பெறலாம். அதேநேரம், உங்கள் புரஃபைல் நேம் தனித்துவமாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
ஆனால், இன்ஸ்டா யூஸர் நேமை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கீழ்க்காணும் இரண்டு விஷயங்களைக் கவனமாகப் பரிசீலித்து முடிவெடுப்பது நல்லது.
உங்களின் அலுவலகப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் நண்பர்கள், குடும்ப வட்டத்தில் பெரிய அளவுக்கு பரவலாக அறிந்திருந்தால் அதற்கேற்ப முடிவு செய்வது.
இன்ஸ்டாகிராமில் உங்கள் யூஸர் நேமை எப்படி மாற்றுவது என்பதை படிப்படியாகத் தெரிந்து கொள்ளலாம்.
இன்ஸ்டாவில் எந்த புரஃபைலின் யூஸர் நேமை மாற்ற வேண்டுமோ அந்தக் கணக்கை லாக்-இன் செய்து, வலதுபுறம் அடியில் இருக்கும் புரஃபைல் பக்கத்துக்குச் செல்ல பிக்சரை கிளிக் செய்யவும். புரஃபைல் பயோவுக்குக் கீழ் இருக்கும் எடிட் ஆப்ஷனுக்கு செல்லவும்.
யூஸர் நேம் ஃபீல்டை செலெக்ட் செய்து, பழைய யூஸர் நேமை டெலிட் செய்யவும். அந்த இடத்தில் நீங்கள் புதிதாக மாற்ற நினைக்கும் யூஸர் நேமை பதிவு செய்யவும்.
அப்போது, நீங்கள் பதிவு செய்திருக்கும் யூஸர் நேம் இன்ஸ்டாவில் யாரும் பயன்படுத்தவில்லை என்றால் அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இன்ஸ்டாவில் யூஸர் நேம் ரொம்பவே தனித்துவமானது என்பதால், ஒரே யூஸர் நேமை ஒருவருக்கு மேல் பயன்படுத்த முடியாது.
இன்ஸ்டாவில் வேறு யாரும் பயன்படுத்தாத யூஸர் நேமை நீங்கள் பதிவு செய்த பிறகு, அந்த மாற்றங்களை சேவ் செய்துகொள்ளலாம்.
கண்டிப்பாக முடியும். நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் யூஸர் நேமை மாற்றிக் கொள்ள முடியும்.
புதிய யூஸர் நேமை மாற்றிய 14 நாட்களுக்குள் வேறு யாரும் அந்தப் பெயரைப் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் உங்களுடைய பழைய யூஸர் நேமையே மாற்றிக் கொள்ள முடியும்.
யூஸர் நேமில் எழுத்துகள், எண்கள் மற்றும் அடிக்கோடு (Underscore) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். யூஸர் நேமில் 30 கேரக்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.