இன்ஸ்டாகிராமில் இனி நீண்ட நேர வீடியோக்களும் பார்க்கலாம்: விரைவில் வரும் புதிய வசதி

யூடியூப்பில் வருவது போல 90 நிமிடங்கள் வரை ஒளிபரப்பாகும் வீடி யோக்களையும் பதிவேற்றலாம்.

இன்ஸ்டாகிராமில் இனி நீண்ட நேர வீடியோக்களும் பார்க்கலாம்: விரைவில் வரும் புதிய வசதி
Published on: 

புதிய அப்டேட்

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பயன்படுத்தும் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் புகைப்படம் மட்டும் பதிவு செய்யும் செயலியாக இருந்த இன்ஸ்டாகிராம், நாளடைவில் வீடியோ பதிவேற்ற வசதியையும் கொண்டு வந்தது. டிக் டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டாவில் அறிமுகமான ரீல்ஸ் வசதி பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிய அம்சங்களை இன்ஸ்டா அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் நீண்ட நேர வீடியோக்களும் இடம் பெறும் வகையில் புதிய அப்டேட் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பீச்சர்ஸ்' (Features) என்ற புதிய வசதி

அதாவது, இன்ஸ்டாகிராம் தளத்தில் வழக்கமாகப் பார்க்கும் செங்குத்து வடிவிலான குறுகிய வீடியோக்களுடன் (போர்ட்ரெய்ட் வீடியோ), கிடைமட்ட வடிவிலான அகலத்திரை வீடியோக்களையும் (லேண்ட்ஸ்கேப் வீடியோ) வெளியிடும் வகையில் 'பீச்சர்ஸ்' (Features) என்ற புதிய வசதியை மெட்டா நிறுவனம் சோதித்து வருகிறது. இதன்மூலம் யூடியூப்பில் வருவது போல 90 நிமிடங்கள் வரை ஒளிபரப்பாகும் வீடி யோக்களையும் பதிவேற்றலாம். அவை செங்குத்து வடிவிலான வீடியோக்களாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.இதன் மூலம் பாட்காஸ்ட், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்ற நீண்ட நேர வீடியோக்களை அகலத்திரை வடிவில் முழுமையாகப் பார்க்க முடியும்.

X