ஸ்பார்க் 10 புரோ ஸ்மார்ட்போன்

டெக்னோ நிறுவனம் புதிதாக 10 புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்பார்க் 10 புரோ ஸ்மார்ட்போன்
Published on

இது 6.78 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.12,499. இதில் ஆக்டாகோர் மீடியா டெக் ஹீலியோ பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உடையது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com