வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தானே, கோப்ரி பகுதியை சேர்ந்த நேற்று முந்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தானே,

தானே, கோப்ரி பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com