பேய் படத்தில் தமன்குமார்

திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த `பூங்கா நகரம்' என்ற பேய் படத்தில் கதாநாயகனாக தமன் குமார் நடிக்கிறார்.
பேய் படத்தில் தமன்குமார்
Published on

இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன், `பூங்கா நகரம்' என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் கதாநாயகனாக தமன் குமார் நடிக்கிறார். நாயகியாக ஸ்வேதா டோரத்தி நடிக்கிறார். பிளாக் பாண்டி உள்ளிட்ட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

திருவண்ணாமலையை கதைக்களமாக கொண்டு திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த பேய் படமாக இது உருவாகிறது. இந்த படத்துக்கு பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹமரா சி.வி இசையமைத்துள்ளார். அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார். படத்தின் முதல் தோற்றத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com