மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய கழுகு ஆட்டோ டிரைவர் மீட்டு சிகிச்சை அளித்தார்

கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய கழுகை ஆட்டோ டிரைவர் ஒருவர் மீட்டு சிகிச்சை அளித்தார்.
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய கழுகு ஆட்டோ டிரைவர் மீட்டு சிகிச்சை அளித்தார்
Published on

கும்பகோணம்,

கும்பகோணம் பொற்றாமரை குளம் அருகே நேற்று காலை வானில் ஒரு கழுகு பறந்து கொண்டிருந்தது. இந்த கழுகு எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் மோதியது. இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த கழுகு கீழே விழுந்து உயிருக்கு போராடியது. இதைக்கண்ட கும்பகோணம் பழைய அரண்மனை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன் விரைந்து சென்று கழுவை மீட்டு அதன் மீது தண்ணீரை தெளித்து மயக்கத்தை தெளியவைத்தார். பின்னர் அவர் கழுகை எடுத்துக்கொண்டு கும்பகோணம் லெட்சுமி விலாஸ் தெருவிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கழுகிற்கு டாக்டர் சிகிச்சை அளித்து வாய் வழியாக குளுக்கோஸ் கரைசலை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து கழுகு தெளிவடைந்து எழுந்து நின்றது. ஆனாலும் பறக்கும் நிலைக்கு வரவில்லை. கழுகை மீண்டும் நாளை(இன்று) சிகிச்சைக்கு கொண்டு வருமாறு டாக்டர் கூறினார். கழுகை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாததால் ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்று கழுகை ஒப்படைத்தார். மனித நேயத்தோடு செயல்பட்டு கழுகின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணனை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com