விஜய் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
Published on

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் ஆண்டனி கறுப்பு நிற உடையில் தலையில் தொப்பியுடன், சிலரின் ஓவியங்களைக் கொண்ட காகிதங்களை கைகளில் வைத்துக்கொண்டிருப்பது போல் இடம்பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி துப்பறியும் கதாபாத்திரத்தில் வரலாம் என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com