மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை கைது செய்யவேண்டும்

காரைக்கால் நெடுங்காட்டு பகுதியில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியை கைது செய்ய கோரி பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தினர்.
மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை கைது செய்யவேண்டும்
Published on

கோட்டுச்சேரி

நெடுங்காட்டை அடுத்த மேல பொன்பேத்தியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 43). இவர், நெடுங்காடு ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவருடன் டியூசன் படித்த அதே பள்ளி 12-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் கணேஷ்குமார் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காரைக்கால் மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி பொதுமக்கள், சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி மாநில துணை தலைவர் ராஜசேகரன் தலைமையில் பா.ஜ.க.வினர் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனிடம் புகார் மனு அளித்தனர். அதில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை கைது செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதுபற்றிநடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com