அயலான் படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

அயலான் படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அயலான் படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
Published on

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'அயலான்' படத்தின் புதிய டீசர் நாளை மாலை 07.08 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com