சிறுமியை கர்ப்பிணியாக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுமியை கர்ப்பிணியாக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சிறுமியை கர்ப்பிணியாக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

குளித்தலை

குளித்தலை அருகே உள்ள சிவாயம் கீழக்கோவில்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 37). இவர் தனது மகளுடன் படிக்கும் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் திருமுருகனை கடந்த மாதம் கைது செய்தனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் பேரில் கரூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, திருமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆணையை திருச்சி மத்திய சிறையில் உள்ள திருமுருகனிடம் போலீசார் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com