தொழிலாளி தூக்குப்போட்டு தற்கெலை

பத்தக்குடி அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கெலை செய்துக்கொண்டார்.
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கெலை
Published on

பத்தக்குடி

திருநள்ளாறை அடுத்த பத்தக்குடியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 40). அவரது மனைவி வனஜா. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ராஜீவ்காந்தி சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வனஜா குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதற்கிடையே ராஜீவ்காந்தி தனது மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் வனஜா மறுத்துவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராஜீவ்காந்தி நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com