மையம் என்ற ஒன்று இல்லை.. இயக்குனர் வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் கேரளா திரைப்பட விழாவில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
மையம் என்ற ஒன்று இல்லை.. இயக்குனர் வெற்றிமாறன்
Published on

விடுதலை, வாடிவாசல் படங்களை இயக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன், சமீபத்தில் நடைபெற்ற கேரளாவின் 26வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசினார். இவர் பேசிய இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் பேசியதாவது, திராவிட அரசியலின் கொள்கைகளை தமிழ் சினிமா தற்போது முன்வைத்து வருகிறது. புதிய படங்கள் திராவிட அரசியலின் லட்சியங்களுக்கு வலு சேர்த்து வருகின்றன. சமூக யதார்த்தங்களும், அரசியல் சூழ்நிலைகளும் இத்தகைய திரைப்படங்களுக்கு கருப்பொருளை வழங்குகின்றன. இன்றைய உலகம் இரு பிளவுகளாக உள்ளது. உங்களுக்கான பாதையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் ஒன்று இடது சார்பை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது வலது சார்பை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் மையம் என்ற ஒன்று இல்லை. நீங்கள் மையத்தை தேர்ந்து எடுத்தால், வலது சார்பை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம் என்று பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com