

திருச்சி,
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக பொறியாளர் முருகானந்தம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து முருகானந்தம் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆகியோருடன் நகர செயலாளர் மலை எச்.ஆனந்தன் தலைமையில், பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அணி ஜெபராஜ், மாவட்ட செயலாளர் நற்பணி மன்றம் ஜானி பாஷா, மாவட்ட செயலாளர் தொழிலாளர் அணி ஜான்சன் ராஜ்குமார், மாநில செயலாளர் தொழில் முனைவோர் அணி அய்யனார், ஒன்றிய செயலாளர் சூரியூர் சக்தி, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி மாலை (தெற்கு) முழுவதும் மற்றும் பரகத் நகர், என்.ஐ.டி. குடியிருப்பு ஆகிய பகுதிகளில் டார்ச் லைட்டிற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர். வேட்பாளர் முருகானந்தத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் தங்களின் முக்கிய பிரச்சினைகளான காவிரி குடிநீர் வசதி, தரமான சாலைவசதி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வேட்பாளரிடம் மக்கள் கூறினார்கள். இதையடுத்து உங்களது கோரிக்கைகள் அனைத்தையும், வெற்றி பெற்ற பின் நிறைவேற்றி தருவதாக வேட்பாளர் முருகானந்தம் வாக்குறுதி அளித்தார்.