திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

திருச்செந்தூர்,


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான நேற்று தை உத்திர வருசாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளிதெய்வானை அம்பாள்கள் கும்பங்களுக்கும், குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்துக்கும், பெருமாள் சன்னதி முன்பு பெருமாள் கும்பத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்கள் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 7.30 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள்கள் விமானங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.


இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல், புஷ்பாஞ்சலி நடந்தது. இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவில் கோவில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, உள்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து, மணியம் ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com