திருநெல்வேலி: பங்கு சந்தை வர்த்தகம் என்ற பெயரில் ரூ.6 லட்சம் மோசடி

ராதாபுரம் தாலுகாவை சேர்ந்த நபருக்கு வாட்ஸ்அப் மூலம் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி போலியான நிறுவனத்தின் பெயரில் சிலர் பேசியுள்ளனர்.
திருநெல்வேலி: பங்கு சந்தை வர்த்தகம் என்ற பெயரில் ரூ.6 லட்சம் மோசடி
Published on

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது மிக தீவிரமாக செயல்பட்டுவரும் "Share Marketing Trade Fraud" (பங்கு சந்தை வர்த்தக மோசடி) என்ற மோசடி அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவை சேர்ந்த நபருக்கு Whatsapp வாயிலாக அறிமுகமில்லாத எண்களிலிருந்து வீட்டில் இருந்தபடியே மொபைல்போன் மூலமாக Share Market- Trade செய்து பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதிக லாப பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி போலியான நிறுவனத்தின் பெயரில் பேசியுள்ளனர். அதற்கான Demo Account-ஐ அவரின் பெயரில் உருவாக்கி தொடக்கத்தில் லாபம் வந்தது போல் ஆசையை தூண்டி பணத்தை முதலீடு செய்யச் சொல்லியுள்ளனர்.

பின்னர் பணத்தை செலுத்தியதும் அந்த போலியான website-ல் இரட்டிப்பு லாபம் காண்பித்து அதை எடுக்கவிடாமல் Lock செய்துவிட்டு மேலும், பணம் செலுத்தினால்தான் மொத்த லாப பணத்தை பெற முடியும் என ஆசை வார்த்தைக் கூறி நம்ப வைந்து அந்த நபரிடம் ரூ.6 லட்சம் பணத்தை ஏமாற்றியுள்ளனர். எனவே Share Market Trade என இதுபோன்று பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் இணையதளத்தில் மற்றும் 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்ய வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com