4 முனைப்போட்டி உறுதி: சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டி - நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் அறிவிப்பு

சட்டசபை தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.
4 முனைப்போட்டி உறுதி: சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டி - நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் புதிய வரவாக 2006-ம் தே.மு.தி.க., 2016-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி இடம்பெற்றது. அந்த வரிசையில், 2026-ம் ஆண்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் இறங்குகிறது.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து என போட்டியிட இருக்கிறது.

அதாவது, 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த 4 முனைப்போட்டியை 3 முனைப்போட்டியாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்றன. அதாவது, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைக்கும் முயற்சிகள் திரை மறைவில் நடைபெற்றன. அப்போது, த.வெ.க.வுக்கு 60 தொகுதிகள், துணை முதல்-அமைச்சர் பதவி வழங்குவதாக பா.ஜ.க. தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், த.வெ.க. தரப்பில், முதல் 2½ ஆண்டுகள் விஜய்தான் முதல்-அமைச்சர் என்று கோரிக்கை விடப்பட்டது. இதை பா.ஜ.க. ஏற்றாலும், அ.தி.மு.க. ஏற்கவில்லை. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.

Also Read
தி.மு.க.வில் இன்று முதல் வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்
4 முனைப்போட்டி உறுதி: சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டி - நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் அறிவிப்பு

இந்த நிலையில்தான் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற சி.பி.ஐ. விசாரணையில் கலந்துகொள்ள கடந்த 14-ந் தேதி இரவு நடிகர் விஜய் டெல்லி சென்றார். அவருடன் நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, விஷ்ணு ரெட்டி ஆகியோரும் சென்றிருந்தனர்.

அன்று இரவே ஆதவ் ஆர்ஜூனா, விஷ்ணு ரெட்டி ஆகியோரை பா.ஜ.க. மேலிட தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, நீங்கள் தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க. வெற்றியை எளிதாக்கிவிடும். தி.மு.க. தோற்க வேண்டும் என நினைத்தால் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

அவர்கள் இருவரும் இந்தத் தகவலை விஜய்யிடம் கூறியிருக்கின்றனர். அவரும் கடந்த 2 நாட்களாக அமைதி காத்தார். இந்த நேரத்தில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா, வராதா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், சட்டசபை தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடப் போகிறோம். தொகுதிகளுக்கு சென்று களப்பணியாற்றுங்கள். வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் நானும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நம்பிக்கையோடு இருங்கள் என்று கூறியுள்ளார்.

Also Read
திமுக அரசை கண்டித்து கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் பங்கேற்பு
4 முனைப்போட்டி உறுதி: சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டி - நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் அறிவிப்பு

த.வெ.க.வில் ஏற்கனவே 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 174 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணி நிறைவடைந்ததும், த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையும், வேட்பாளர்கள் பட்டியலும் ஒன்றாக அறிவிக்கப்பட இருக்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சென்னையில் களம் இறங்க இருக்கின்றனர்.

குறிப்பாக, நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியிலும், புஸ்சி ஆனந்த் தி.நகர் தொகுதியிலும் களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இதேபோல், எழும்பூர் - ராஜ்மோகன், சைதாப்பேட்டை - அருள் பிரகாசம், மயிலாப்பூர் - வெங்கட்ராமன், ஆயிரம் விளக்கு - ஜெ.சி.டி.பிரபாகரன், ஆர்.கே.நகர் - மரிய வில்சன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

ஏனைய தொகுதிகளில் கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது. எதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரியாக இந்த தேர்தல் இருக்கிறது. வெற்றி - தோல்வி என்பது குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே இருக்கும் என்பதால், தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com