அனல்பறக்கும் தேர்தல்களம்: தலைவர்கள் எங்கெங்கு இன்று பிரசாரம்..?

முக்கிய தலைவர்களின் தேர்தல் பிரசாரம், அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அனல்பறக்கும் தேர்தல்களம்: தலைவர்கள் எங்கெங்கு இன்று பிரசாரம்..?
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சியினர், முழு பலத்தையும் காட்டி வருகின்றனர். அக்கட்சிகளின் முக்கிய தலைவர்களின் செய்து வரும் தேர்தல் பிரசாரம், தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைவர்கள் இன்று பிரசாரம் செய்யும் இடங்கள்:-

பிரதமர் மோடி:-

மாலை 5 மணி- கோவை பொதுக்கூட்டம்

ராகுல்காந்தி:-

காலை 11.55- பொன்னேரி, மதியம் 1.15 மணி- சோளிங்கர், மாலை 4 மணி- துறையூர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:-

மாலை 5 மணி- திருப்பூர், இரவு 7 மணி- மேட்டுப்பாளையம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

காலை 9 மணி- திருச்செங்கோடு, மதியம் 3 மணி- கரூர், மாலை 5 மணி- ஈரோடு.

த.வெ.க. தலைவர் விஜய்:-

சென்னை

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

சிதம்பரம், சீர்காழி.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

திருச்செங்கோடு, மொடக்குறிச்சி.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:- விருத்தாசலம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம்:- கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன்:- கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை.

பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்:-

குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி.

த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன்:-

நத்தம், ஒட்டன்சத்திரம்.

நடிகர் சத்யராஜ்:-

ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர், வில்லி வாக்கம், திரு.வி.க.நகர், அண்ணாநகர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com