திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, பிரசாரம், தொகுதி பங்கீடு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் இன்று தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தேமுதிகவுக்கு ஏற்கனவே 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டு அதில் எல்.கே. சுதீஷ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com