குடும்ப தலைவிகளுக்கு விலையில்லா 'பிரிட்ஜ்’; அதிமுக தேர்தல் அறிக்கை முழு விவரம்...!

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது
குடும்ப தலைவிகளுக்கு விலையில்லா 'பிரிட்ஜ்’; அதிமுக தேர்தல் அறிக்கை முழு விவரம்...!
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி என பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக ஏற்கனவே 3 கட்டங்களாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக முழுமையான தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

குடும்ப தலைவிகளின் பணிச்சுமையை குறைக்க அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு (குடும்ப தலைவிகளுக்கு) விலையில்லா ’பிரிட்ஜ்’ வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்

ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 வழங்கப்படும்.

5 லட்சம் பேருக்கும் ஸ்கூட்டி வாங்க ரூ. 25,000 மானியம் வழங்கப்படும்

மாநிலம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்படும்

கொத்தடிமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை முழு விவரம்:-

Attachment
PDF
4. AIADMK Election Manifesto - Assembly General Election - 2026
Preview
X

Daily Thanthi
www.dailythanthi.com