

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் 30-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கும்பகோணம், கிள்ளியூர் ஆகியவை அந்த 5 தொகுதிகள் ஆகும். இந்த தொகுதிகளில் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நாளை முதல் தொடங்குகிறார்.
இதன்படி நாளை (6-ம் தேதி) கும்பகோணம், 7-ம் தேதி திருவையாறு, அரியலூர், லால்குடி, 8-ம் தேதி நன்னிலம், மன்னார்குடி, பாபநாசம், தஞ்சாவூர், 10-ம் தேதி சாத்தூர், கிள்ளியூர், 11-ம் தேதி ராணிப்பேட்டை, 12-ல்கும்பகோணம், 13-ல் ஈரோடு மேற்கு, 14-ம் தேதி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளில் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்கிறார்.
15-ம் தேதி கிள்ளியூர், 16-ம்தேதி தருமபுரி, எடப்பாடி, குமாரப்பாளையம், 17-ம் தேதி அவிநாசி, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, ஈரோடு மேற்கு, 18-ம் தேதி நத்தம், ஒட்டன்சத்திரம், 19 மற்றும் 20 தேதிகளில் கும்பகோணம், ராணிப்பேட்டை, 21-ம் தேதி சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகளில் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.