நாகர்கோவில் வந்தடைந்தார் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகன பேரணி மேற்கொள்கிறார்.
நாகர்கோவில் வந்தடைந்தார் பிரதமர் மோடி
Published on

கன்னியாகுமரி,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்த உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி நாகர்கோவில் வந்து சேர்ந்தார்.

தொடர்ந்து, வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை திறந்தவெளி வாகனத்தில் சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி வாகன பேரணி மேற்கொள்கிறார். இந்த வாகன பேரணியில் பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் எழுந்துள்ள சூழலில் தென் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com