

புதுச்சேரி
30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் விஜய்யின் தவெக போட்டியிடுகிறது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது.
இதற்கான வேட்பாளர் பட்டியலும் தயார் நிலையில் உள்ளது. நாளையுடன் வேட்பாளர் தாக்கலுக்கான தேதி முடிவடைய உள்ள நிலையில் இன்று மாலை தவெக தலைவர் விஜய் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறார்.