புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

கடற்கரை சாலையில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்குள்ள ஓட்டல்களில் பெரும்பாலான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஓட்டல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வண்ணமயமான ஒளி விளக்கு அலங்காரங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி கடற்கரை சாலையில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். கடற்கரை சாலையில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டைகளை தாண்டி ஒரு சில சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து வந்த நிலையில், போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும் தடுப்பு கட்டைகளை தாண்டி யாரும் செல்லாத வகையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com