ரெயில் முன் பாய்ந்து வாலிபருடன் மாணவி தற்கொலையா? - போலீசார் தீவிர விசாரணை

திருச்சூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி ஒரு சிறுமியும், வாலிபரும் பிணமாக சிதறி கிடந்தனர்.
ரெயில் முன் பாய்ந்து வாலிபருடன் மாணவி தற்கொலையா? - போலீசார் தீவிர விசாரணை
Published on

கொல்லம்,

கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் கண்ணநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 21). இவருடைய உறவினரும் கொல்லம் மாவட்டம், வளவஞ்சால் பகுதியை சேர்ந்தவர் விஸ்மையா (15). 10-ம் வகுப்பு மாணவி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் செல்வதாக கூறிச் சென்ற விஸ்மையா பின்னர் வீடு திரும்பவில்லை. அபிலாஷையும் காணவில்லை.

இதைய டுத்து இவரது உறவினர்கள் பல இடங்களிலும் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து கண்ணநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு 1.45 மணியளவில் அங்கமாலி ரெயில் நிலையத்தில் திருச்சூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி ஒரு சிறுமியும், வாலிபரும் பிணமாக சிதறி கிடந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி அங்கமாலி அரசு தாலுகா ஆஸ்பத் திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், அங்கமாலி போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது மாயமான அபிலாஷ், விஸ்மையா என தெரியவந்தது.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பெற்றோர் மற்றும் உறவி னர்கள் 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். மாய மான 2 பேரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரி சோதனைக்கு பிறகு 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com