ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள்

காரைக்கால் ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள் பிடிக்கப்படுவதை வனத்துறை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள்
Published on

கோட்டுச்சேரி

ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள் பிடிக்கப்படுவதை வனத்துறை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி நீர் திறப்பு

திருச்சி கல்லணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் காரைக்கால் மாவட்டத்தின் கடை மடை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. இதில் நன்னீர் ஆமைகள் ஆறுகள், வாய்க்கால்களில் அடித்து வரப்படுகிறது. இந்த ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக நீர்நிலையில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறுகின்றன.

இந்த ஆமைகளை இறைச்சிக்காக சிலர் பிடித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் சிறிய தொட்டி போல் வலையை அமைத்து, அதில் இரையைப் போட்டு ஆற்றங்கரையோரம் சேற்றில் வைக்கின்றனர். இனப்பெருக்கத்துக்காக வெளியேறும் ஆமைகள் இந்த தொட்டி வலையில் சிக்குகின்றன. இவற்றை சேகரித்து அசைவ பிரியர்கள் சாப்பிடுகின்றனர்.

ஒரு கிலோ ரூ.100

ஓடு நீக்காத நன்னீர் ஆமை கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. பெரும்பாலும் மதுப்பிரியர்களால் ஆமை இறைச்சி விரும்பப்படுகிறது.

இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமையின் ஓடு கலைபொருட்கள் செய்யவும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. காரைக்கால் ஆமைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com