டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது

டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது
Published on

சோழவந்தான்,மே

சோழவந்தான் அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது இரும்பாடி டாஸ்மாக் கடையின் முன் கதவை சிலர் உடைத்து கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும் உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். போலீசார் அவர்களை விரட்டி சென்றபோது வைகை ஆற்று பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார், ஏட்டு சுந்தரபாண்டி உள்ளிட்ட போலீசார் வைகை ஆற்றில் மறைந்திருந்த கும்பலை மடக்கினர். அதில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். 2 பேர் சிக்கி கொண்டனர். விசாரணையில் அவர்கள், சோழவந்தான் பேட்டை சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்(வயது 40), அழகுமுருகன்(20) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com