நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு விரால் மீன் குஞ்சுகள் - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் மீனவர்களுக்கு விரால் மீன் குஞ்சுகளை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.
நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு விரால் மீன் குஞ்சுகள் - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்
Published on

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியத்தின் நிதியில் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கடல் மீன் வளர்ப்பு கூண்டுகள் மற்றும் விரால் மீன் குஞ்சுகளை கலெக்டர் வீரராகவ ராவ் வழங்கினார். இதைதொடர்ந்து அவர் பேசியதாவது:-

மீனவர்களின் நலனுக்காக மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 237 கிலோ மீட்டர் நீளம் கடற்கரையும், 180 கடலோர மீன்வள கிராமங்களும் உள்ளன. மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக மீன்பிடி தொழில் பெரும்பான்மையான மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் ஏறத்தாழ 1.47 லட்சம் மெட்ரிக் டன் அளவில் மீன்பிடி கிடைக்க பெற்றுள்ளது. இது தமிழகத்தின் மொத்த மீன்பிடியில் 20 சதவீதம் ஆகும்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் நலனுக்காக நீலப் புரட்சி திட்டத்தின் கீழ் 60 சதவீதம் அரசு மானியம் மற்றும் 40 சதவீதம் பயனாளிகள் பங்குத்தொகையில் கடல்மீன் வளர்ப்பு கூண்டுகள் மற்றும் கடல் விரால் மீன்குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ரூ.5 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 100 மீன் வளர்ப்பு கூண்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் முதல்கட்டமாக 20 பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த மீன்வளர்ப்பு கூண்டுகளில் கடல் மீன் வளர்ப்பதற்கான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் மண்டபம் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் வழங்கப்படும். இதன்மூலம் 6 முதல் 8 மாத கால இடைவெளியில் ஏறத்தாழ 2.5 முதல் 2.8 டன் அளவில் கடல் விரால் மீன்களை உற்பத்தி செய்து சுமார் ரூ.3 லட்சம் வரையில் லாபம் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com