பிரபல நடிகையை கையில் தூக்கிக் கொண்டு உலா வரும் விஜய் தேவரகொண்டா

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
பிரபல நடிகையை கையில் தூக்கிக் கொண்டு உலா வரும் விஜய் தேவரகொண்டா
Published on

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

'லைகர்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தை இந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள்.

இந்நிலையில், பஞ்சாபில் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகை அனன்யா பாண்டேவை, விஜய் தேவரகொண்டா கையில் தூக்கி கொண்டு வரும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com