இயற்கை வளங்களை சுரண்டும் வில்லன்கள்

இயற்கை வளங்களை சுரண்டும் வில்லன்கள்
Published on

`பாதகன்' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் ஆர்.சதீஷ்ராஜா கதாநாயகனாக நடித்து தயாரிக்கிறார். அம்சரேகா, பிரியாஶ்ரீ, ராஜசேகர், கராத்தே ராஜா, குல்ஷன், முத்துக்காளை, போண்டாமணி, ராஜாராம், கே.வி.மணிகண்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை சி.தண்டபாணி டைரக்டு செய்கிறார். இவரே ஒளிப்பதிவு மற்றும் பாடல் எழுதும் பணிகளையும் ஏற்றுள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் வில்லன்களை எதிர்க்கும் கதாநாயகனும், கதாநாயகியும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். முடிவில் வில்லன் என்ன செய்தான்? என்பதை மிகவும் திரில்லாகவும், ரசிகர்கள் அதிர்ச்சியோடு பார்க்கும் வகையிலும் சொல்லி இருக்கிறேன்'' என்றார். இசை: ரவிகிரண். படப்பிடிப்பு செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com